கட்டைவிரல் பிடிங்கிட்டாங்க… திருமணமே ஆகல… என் வாழ்க்கையை அழித்தது வடிவேலு தான் – பிரபல காமெடி நடிகர் வேதனை!

Author: Shree
17 June 2023, 2:26 pm

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகா வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் பாவா லக்ஷ்மணன். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி உலகில் பல்வேறு நடிகர்களின் காமெடி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக “வா மா மின்னல்” காமெடி இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை.

மிகவும் வறுமையில் இருக்கும் இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மயில்சாமி, விவேக், சிங்கமுத்து, மனோ பாலா போன்ற நடிக்கிறாள் செய்து வந்த உதவியால் இத்தனை உயிர் பிழைத்து வந்தேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், எனக்கு சுகர் அதிகமானதால் கடந்த 10 நாட்களாக ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடைய கட்டை விரலை எடுத்துவிட்டார்கள், காயம் சரியாக 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என சொன்னார்கள்.

நான் இப்போது வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் நண்பர்கள் உதவியால் வாழ்கிறேன். கட்டை விரல் எடுத்த வலியை விட வாய்ப்பு கிடைக்காதது தான் பெரிய வலியாக இருக்கிறது. எனக்கு சினிமாவில் வடிவேலு தவிர நிறைய பேர் உதவியிருக்கிறார்கள். எனக்கு இப்போது 58 வயதாகிறது. நான் கல்யாணமே பண்ணிக்கல.
குழந்தைகள் இருந்தால் நான் ஏன் உதவி கேட்க போகிறேன்.

அதனால் திரைத்துறையிடம் உதவியை எதிர்ப்பார்க்கிறேன் என வேதனையுடன் கூறியிருக்கிறார். மேலும் வடிவேலு மோசமானவர். அவரை விட யாரேனும் நன்றாக நடித்துவிட்டால் தன் நடிப்பை காட்டிலும் மற்ற நடிகர்கள் நடிப்பை மக்கள் பெரிதாக பேசினால். அவர்களை அத்தோடு ஏறகட்டிவிடுவார் வடிவேலு. அவர்களை வளரவே விடமாட்டார். அப்படித்தான் மாயி படத்தில் வா மா மின்னல் காமெடியில் நான் பெரிதாக பேசப்பட்டதால் வாய்ப்புகள் இழந்தேன் என உருக்கமாக கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 787

    13

    6