புற்றுநோயால் மரணமடைந்த இளையராஜா மகள்.. பவதாரிணி உடல் எப்போது இந்தியா வரும்?

Author: Vignesh
26 January 2024, 7:54 am

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

bhavatharani

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் நேற்று மாலை 5.20 மணிக்கு திடீரென மரணமடைந்துள்ளார்.

இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே “ஆயுர்வேத சிகிச்சை”க்காக குடும்பத்தினர் இலங்கைக்கு அழைத்து சென்ற நிலையில், தான் உயிர் பிரிந்தது.

இதையடுத்து, பவதாரணையின் உடல் இலங்கையில் இருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. இலங்கையின் கொழும்பு நகரில் நாளையும் நாளை மறுநாளும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது இதற்காக இளையராஜா தற்போது இலங்கையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 594

    0

    0