‘மகள் முன்னே வேறு ஆணுடன்’.. நடிகை லட்சுமி குறித்து பகீர் தகவலை வெளியிட்ட பயில்வான்..!
Author: Vignesh13 March 2024, 3:04 pm
60 இருந்து 90 வரை தென் இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை லட்சுமி. ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

1969இல் லட்சுமி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆறு ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக 1974 ல் விவாகரத்து பெற்றார். அதன்பின் 1975 இல் மோகன் சர்மா என்பவரை அடுத்த வருடத்திலேயே திருமணம் செய்தார். அவருடன் ஐந்து வருட வாழ்க்கைக்கு பின் 1980ல் அவரையும் பிரிந்தார்.

அதன் பின் 7 ஆண்டுகள் கழித்து 1987 சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து தற்போது வாழ்ந்து வருகிறார். லட்சுமிக்கு முதல் கணவர் பாஸ்கரனுக்கும் பிறந்த பெண் தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர். அதன் பின் சிவசந்திரனுக்கும் லட்சுமிக்கும் சிவசந்திரன் சம்யுக்தா என்ற மகள் இருக்கிறார்.

சமீபத்தில், அவரது முன்னாள் கணவரான மோகன் சர்மா சில தனிப்பட்ட விஷயங்களை பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், லட்சுமியின் உண்மையான முகத்தை பற்றி தெரிவித்திருக்கிறார். சாவித்திரி, பத்மினி, சரிதா போன்ற நடிகைகளின் வரிசையில் லட்சுமி ஒரு நல்ல நடிகை அவரது மகள் ஐஸ்வர்யாவும் நடித்துள்ளார்.
பொதுவாக, நடிகைகளுக்கு, சொந்தக்காலில் நிற்கிறோம் என்ற எண்ணம் வந்து விட்டால், தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். அதனால், திருமண வாழ்க்கைக்கு தயாராக இருக்க மாட்டார்கள். கழுத்தில் தாலி கட்டிய பின் நீ இப்போது ஒரு குடும்பப் பெண் என்று அடங்கி கட்டுக்குள் வந்துவிடுவார்கள். அதற்கு காரணம், குடும்பப் பெண் என்று கூறும் போது அவர்களுக்கு அந்த இடத்தில் எல்லாமே கூடிவிடும். அப்படித்தான் நடிகை லட்சுமி என்ஜினியரான பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கர்ப்பமும் ஆகி ஐஸ்வர்யாவை பெற்றெடுத்தார்.
அதன் பின்னர், நடிக்க செல்வேன் என்று சொல்ல மாப்பிள்ளை வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்பதால், கணவன் மனைவிக்குள் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு பின்பு விவாகரத்தில் முடிந்தது 2-ம் திருமணம் செய்து கொண்டார். பின் பழையபடி லட்சுமி நடிக்க ஆரம்பிக்க மோகன் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஒருமுறை அவரை லட்சுமி ஷாப்பிங் அழைத்துச் செல்ல அவரும் சென்று இருக்கிறார். ஷாப்பிங் முடிந்து மோகனுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறார் லட்சுமி. ஆனால், மோகன் சர்மா ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன் என்று கூறி குங்குமமும் தாலியும் வாங்கி கட்டியிருக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்னர் மோகன் சர்மாவுடன் லட்சுமி மகள் ஐஸ்வர்யா நன்றாகவே பழகிவிட்டார்.
ஒருநாள் ஐஸ்வர்யா மோகன் சர்மா விடம் நீங்கள் இல்லாத சமயத்தில் அம்மா பலருடன் பேசுவதாக கூறியுள்ளார். ஐஸ்வர்யாவுக்கும் லட்சுமிக்கும் இதன் மூலம் தான் சண்டைகள் வெடித்தது. எந்த விஷயத்தில் மகளுக்கும் அம்மாவுக்கும் சண்டை வரக்கூடாதே அதுவும் வந்தது. பின் மகள் சொல்லும் படி நீ இப்படி நடந்து கொள்ளலாமா என்று மோகன் சர்மா சொல்ல அதை எல்லாம் நீ சொல்லாதே நான் நடிகை என்று கோபத்தில் லட்சுமியை விட்டு பிரிந்து விட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.