தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டில் எகிறி வருகிறது. நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் லிஸ்ட் விஜய் மேஜையில் இருப்பதாகவும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து அவர் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விஜய் இன்னும் நாட்களை கழிக்காமல் சூட்டோடு சூடாக உடனே இப்போதே அரசியலுக்கு வர வேண்டும் என அவரது நலன் விரும்பியாக அறியப்படும் பழ.கருப்பையா வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது. இதனால், எப்படி பார்த்தாலும் இன்னும் 6 மாதங்களில் விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார். மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள். இப்போதே அவரவர் பகுதிகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு விஜயின் வருகையால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் குறித்து பேசி உள்ளார். அதாவது, நடிகர் விஜய் பாண்டிச்சேரியில் கோட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். அதே சமயம் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்தின் சூட்டிங்கில் பாண்டிச்சேரிக்கு சென்றுள்ளார். இருவரின் படத்தின் ஷூட்டிங் ஒரே இடத்தில் நடப்பதால், இருவரும் ஒரே ஓட்டலில் தங்கி உள்ளார்களாம். ஒரே ஓட்டலில் ரூம் புக் செய்யப்பட்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் கீர்த்தி சுரேஷும் விஜயும் டிஸ்கஷன் செய்து வருவதாகவும், 2 மணி நேரம் டிஸ்கஷன் செய்து வந்தது. ஹோட்டலில் இருந்தவர்கள் மூலமாக இந்த விஷயம் கசிய தொடங்கியது. அது தன் காதில் விழுந்துள்ளதாகவும், அதைத்தான் தான் இப்போது வெளியே கூறுகிறேன் என பயில்வான் ரங்கநாதன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.