கடந்த சில நாட்களாக நயன்தாரா பேச்சு தான் கோலிவுட் முழுவதும் ஹாட் டாபிக் ஆக மாறி இருக்கிறது.தனுஷுக்கு அவர் எழுதிய கடிதம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் ஆவணப்படம் ரிலீஸாகியிருக்கிறது.இதில் நயன்தாராவின் கடந்த கால காதல், ஆரம்ப கால வாழ்க்கை, தன்னுக்கு ஏற்பட்ட துரோகம்,வாழ்க்கை போராட்டம்,விக்னேஷுடன் காதல் என பல வித நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
இவருடைய கடைசி படம் தெலுங்கில் ரிலீஸ் ஆனா ஸ்ரீ ராம ஜெயம் என தெரிவித்து கண்ணீருடன் சினிமாவை விட்டு விலகினார்.இது என்னுடைய முடிவு இல்லை எனவும் பிரபு தேவாவை குற்றம் கூறி இருப்பார்.சிம்புவுடன் இருந்த உறவையும் சொல்லி வருத்தப்பட்டிருப்பார்.
அதன் பின்பு 2 வருடங்களுக்கு பிறகு ராஜா ராணி திரைப்படம் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து உச்சத்தை தொட்டார் என பல வித நிகழ்வுகளை தன்னுடைய ஆவணப்படத்தில் பகிர்ந்துள்ளார் நயன்தாரா.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து பேசியிருக்கிறார்.
அதில் “நயன்தாரா எப்போதும் வியாபார பார்வை உடையவர். அவர் பல தொழில்களில் ஈடுபட்டுவருகிறார். எப்போதும் அவர் பணமே குறி என நினைப்பவர்.திருமண வீடியோவையும் நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்று பணம் பார்க்கத்தான் யாரையும் அவர் அழைக்கவில்லை.
இதையும் படியுங்க: தசராவை குறிவைக்கும் காந்தாரா 2 …. கோலாகலமாக கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்..!
தனுஷிடம் கேட்காமலேயே நானும் ரௌடிதான் பட காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தவறு. உங்களுக்கு தனுஷ் சாபம் விடுவதற்கு நீங்கள் என்ன கண்ணகியா..? வல்லவன் படத்தில் உங்கள் உதட்டை கடிப்பதுபோன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தது. பின்பு சிம்புவுடனான காதல் முறிந்தது. அந்தக் காதலுக்கு பிறகு பிரபுதேவாவை காதலித்தீர்கள். நீங்கள் இன்னொருவரின் கணவருக்கு ஆசைப்பட்டவர்தானே.
பிரபுதேவாவின் மனைவி உங்கள் வீட்டுக்கு வந்து கத்திவிட்டு போகவில்லையா. இப்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்துவிட்டீர்கள். மேலும் நயனுக்கு குழந்தை பிறக்காது என்று அடித்து கூறினேன்.அதற்கு பிறகு அவர்கள் என்னிடம் பேசவே இல்லை”என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.