அப்பா பேச்சை கேட்காமல் ஓவர் அதுப்பில் ஆடும் அதிதி.. நொந்து கொள்ளும் ஷங்கர்..!

Author: Vignesh
19 July 2023, 1:30 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

aditi shankar - updatenews360

அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தது.

இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால’ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதிதி ஷங்கர் தற்போது அவ்வப்போது, ஹாட் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியும் வருகிறார்.

aditi shankar - updatenews360

இந்நிலையில், தன் குடும்ப வாழ்க்கையில் இயக்குனர் சங்கர் தன்னுடைய இரு மகள்களால் நிம்மதி இல்லாமல் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட பணக்கார குடும்பத்தில் மகளை திருமணம் செய்து வைத்தாராம் சங்கர்.

aditi shankar -updatenews360

இதனிடையே, கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்து அவர் மகள் நன்றாக இருப்பாள் என்று நினைத்து பார்த்த சில மாதங்களில் அவரை பிரிந்துவிட்டார். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது நடந்து வருகிறதாம்.

aditi shankar -updatenews360

அதேபோல், இரண்டாம் மகள் அதிதி டாக்டர் பட்டம் முடித்த பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் அடம் பிடித்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாவீரன் படத்தில் தற்போது நடித்து உள்ளார். ஆனால், ஒப்பந்தம் ஆனதே சங்கருக்கு தெரியாது என்றும், சினிமாவே வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் அப்பா பேச்சை கேட்காமல் தனது முடிவை எடுத்து வருகிறாராம் அதிதி. இப்படி இருமகள்களை நினைத்து நிம்மதி இல்லாமல் தவித்து சினிமாவில் நாட்டம் இல்லாமல் இருந்து வருகிறாராம் ஷங்கர் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 952

    3

    3