பயில்வானை துரத்தி துரத்தி காதலித்த கவுண்டமணி பட நடிகை..! கடைசிவரை சேர முடியாமல் போன சோகம்..!

Author: Vignesh
14 February 2023, 10:35 am

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

சமீபகாலமாக youtube சேனல்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியத்தை பலர் கண்டித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

bayilvan-ranganathan-updatenews360

இதனிடையே, நடிகைகளின் உறவுகளை பற்றி பேசிய பயில்வான், தன்னை காதலித்த நடிகைகள் பற்றி கூறி மிகப்பெரிய குண்டை போட்டுள்ளார். ஷகிலா எடுத்த பேட்டியில், தன்னை 3 நடிகைகள் காதலித்ததாகவும் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், அக்பேட்டியில் பயில்வான் கூறியுள்ளார்.

ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டேன் எனவும் கவுண்டமணி உடன் பல படங்களில் நடித்த காமெடி நடிகை ஒருவர் காதலித்ததாகவும் திருமணம் செய்ய கேட்டதாக்கவும் பயில்வான் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவரின் காதலை ஏற்க மறுத்ததோடு எங்கள் குடும்பம் ஆச்சாரமானவர்கள், அப்படியொரு திருமணத்தை ஏற்கமாட்டார்கள் என்று கூறிவிட்டதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

இப்போது அந்த நடிகை மோசமான நிலையில் இருந்து கஷ்டப்பட்டு வருகிறார் என்ற கூடுதல் தகவலையும் கூறியிருக்கிறார். அந்த நடிகை யார் என்பதை மட்டும் கூறாமல் பயில்வான் தவிர்த்து இருக்கிறார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 674

    1

    2