கதம் கதம்..! பிரியா பவானி சங்கரை காதலித்து கைவிட்ட காதலன்.. உண்மையை உடைத்த பயில்வான்..!
Author: Vignesh25 February 2023, 4:45 pm
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.
பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, அடுத்தடுத்து, பத்து தல, அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இதற்கிடையில் தன்னை சிலர் ஏமாற்றிவிட்டதாக பிரியா பவானி சங்கர் கூறியிருந்ததாக ஒரு தகவல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு விஷத்தை பகிர்ந்துள்ளார். அதில், குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், காதலரை வெளிச்சம் போட்டு காட்டியதோடு ஈசிஆர் ரோட்டில் பங்களா கட்டி காதலருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையும் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் மோகம் 30 நாள் சொல்வதை போல, பிரியா பவானி சங்கரின் காதலர் சரியாக இல்லை என்றும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் பயில்வான் கூறியுள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து பிரியா பவானி சங்கரின் தோழிகளிடம் தன்னுடைய காதலர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தான் நினைத்தது போல் அவர் இல்லை என்று பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளாராம்.
மேலும், சினிமாவில் கதாநாயகி என்றால் நடிகருடன் நெருக்கமாக நடிக்க வேண்டும் எனவும், வெளியூரில் தங்க வேண்டும் எனவும் நினைத்து காதலர் சில கண்டீசன் போட்டதாகவும், ஆனால், பிரியா பவானி சங்கர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் திருமணத்திற்கு பின் அதை தொடரவும் ஆசைப்பட்டதாகவும், இது அவரின் காதலருக்கு பிடிக்கவில்லை என்றும் பயில்வான் தெரிவித்துள்ளார்.
அதற்கு பிரியா பவானி சங்கர் மறுத்து இருக்கலாம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் 5 வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிரியா பவானி சங்கர் கூறியதால் அவரின் காதலருடன் பிரேக் கப் ஏற்பட்டு இருப்பதாக பயில்வான் பகிர்ந்துள்ளார்.