விஜய் – சங்கீதா விவாகரத்து..? உண்மையை கூறி முற்றுப்புள்ளி வைத்த பயில்வான்..!
Author: Vignesh2 March 2023, 11:45 am
விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.
அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விஜய்யின் எந்த பட நிகழ்ச்சி என்றாலும் அவரது மனைவி சங்கீதா கலந்துகொள்வார். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சி என்றாலும் கலந்துகொள்வார். ஆனால் அட்லீ-ப்ரியாவின் சீமந்தம், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு சங்கீதா அவர்கள் வரவில்லை.
இதனால் பல செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. அவர் வராததற்கு முக்கிய காரணம் அவர்களின் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா அங்கு இருப்பதால் நிகழ்ச்சிகளுக்கு வர முடியவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, பிரிந்து வாழ்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். நடிகர் விஜய் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தாலும் இடையில் பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். அந்தவகையில் விஜய்யின் ஆரம்பகாலத்தில் இருந்து தற்போது விவாகரத்து வதந்திகள் வரை பயில்வான் ரங்கநாதன் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்யுடன் நடிகை சங்கவி நடிக்க ஆரம்பித்த போது, விஜய் குறித்தும் சங்கவி குறித்தும் ஆரம்பத்திலேயே காதல் கிசுகிசு பரவியதால் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என்று அறிவித்தார்.
இதனையடுத்து, நடிகை திரிஷாவுடன் தொடர்ந்து நடித்து விஜய் காதல் கிசுகிசுக்களில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அதனால் தற்போது 17 ஆண்டுகளாக விஜய்யுடன் திரிஷாவை மனைவி சங்கீதா நடிக்கவிடாமல் தடுத்ததாக கூறப்பட்டது. தற்போது மீண்டும் திரிஷா, லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் விரைவில் திருமணம் என்று வதந்தி பரவி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இதற்கு கீர்த்தி சுரேஷ் அம்மா விளக்கம் அளித்தும் இனிமேல் இருவரும் ஜோடியாக நடிக்கமாட்டார்கள் என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, நடிகர் விஜய் சங்கீதாவை காதலித்து திருமணம் செய்த பின் ஒவ்வொரு செயலும் மனைவின் அனுமதியுடனும் ஆலோசனையின் பெயரில் தான் நடப்பதாக பயில்வான் தெரிவித்துள்ளார். கணவர் விஜயை சங்கீதா எப்போதும் விட்டுக்கொடுக்க வில்லை என்றும், காசுவாங்கிய சிலர் விஜய்க்கு விவாகரத்து என்ற செய்திகளை பரப்பி வருவததாகவும், இது வெறும் பொய் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜயின் சில எதிரிகள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்ன என்று தெரியவில்லை என பயில்வான் தெரிவித்துள்ளார். விஜய் நிச்சயமாக குடும்பத்தை விட்டு பிரியமாட்டார், நல்ல தந்தையாக மகனுக்கும் மகளுக்கும் இருப்பார் என்று பயில்வான் கூறியுள்ளார்.