விஜய் சேதுபதியின் ரகசிய உறவால் விவாகரத்து வரை சென்ற மனைவி.. உண்மையை உடைத்த பயில்வான்..!
Author: Vignesh11 May 2023, 4:30 pm
சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகை நடிகர்களை ஒருத்தரையும் விடாமல் விமர்சித்து வரும் பயில்வான், தற்போது விஜய் சேதுபதியின் வாழ்க்கையை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார்.

இவர் ஆரம்பதில் சற்று சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை விஜய் சேதுபதியை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.
இதுவரை எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாத விஜய் சேதுபதி தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் சேர்த்து வச்சி பேசப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ரம்மி, தர்மதுரை, கா. பெ ரணசிங்கம், பண்ணையாரும் பதமினியும், செக்கச்சிவந்த வானம், இடம் பொருள் ஏவல், சூப்பர் டீலக்ஸ் இப்படி பல படங்களில் சேர்ந்து நடித்தது எல்லாம் அவர்களின் நெருக்கமான ரகசிய உறவால் தானாம்.
ஒரு கட்டத்தில் இது விஜய் சேதுபதியின் மனைவி ஜெஸ்ஸிக்கு தெரியவர, குடும்பத்தில் மிகப்பெரிய சண்டை வெடித்து விவாகரத்து வர சென்றுவிட்டாராம். பின்னர் விஜய் சேதுபதி சத்திய வாக்கு ஒன்று கொடுத்து மனைவியை சமாதானம் செய்து மீண்டும் இருவரும் சேர்ந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், இதை விஜய் சேதுபதியே பத்திரிக்கையாளர்களிடம் அவரின் சிபாரிசில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் அவருடன் நடித்ததாக, ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி வெள்ளந்தியாக கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.