தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா கடந்த 24ம் தேதி கொழும்பை வந்தடைந்தார். இதனிடையே, பவதாரணிக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவமனை கூறியது.
இந்நிலையில் பவதாரிணி குறித்து பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசுகையில், பவதாரிணி கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் இளையராஜா ஸ்ரீலங்காவில் கச்சேரி வைத்திருக்கக் கூடாது. தன்னுடைய மகள் இந்த நிலைமையில் இருக்கும்போது இப்படி ஒரு கச்சேரி அவசியம் தானா? இதிலிருந்து என்ன தெரிகிறது இளையராஜாவுக்கு பணத்தை அதிகமாக இருக்கிறது என்று தெரிகிறது என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
ஆனால், பவதாரிணி இலங்கையில் மருத்துவ சிகிச்சைக்காக தான் சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அதற்கு ஏன் பயில்வான் இப்படி பேசுகிறார் என ரசிகர்களும் பயில்வானை கண்டபடி கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.