டேய் ராஜன் அந்த நடிகை எங்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாளா?.. பயில்வான் ரங்கநாதன் அதிரடி..!

Author: Vignesh
11 October 2023, 4:30 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.

உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது, மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

bayilvan ranganathan-updatenews360

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், பங்கேற்ற பயில்வான் ரங்கநாதன் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் பேசிய வீடியோவில், “டேய் ராஜன். உன்னை நான் இனி டேய்னுதான் கூப்பிடுவேன். ஒரு நடிகை என்னை அடித்ததாக சொன்னாய். அதை நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். ஏன் இப்படி புளுகுற. நானும் அந்த நடிகையும் சமாதானமாக போய்ட்டோம். இப்படி புளுகுனா புள்ளை, குட்டிங்க நல்லா இருக்காது ராஜன்” என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=B0RwUyu95UM
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 648

    0

    1