அதுக்கு மட்டும் வடிவேலுவை யூஸ் பண்ணிட்டு.. இப்போ ஏன் தப்பா பேசுற.. நடிகையை வெளுத்து விட்ட பயில்வான்..!

Author: Vignesh
10 August 2023, 6:00 pm

தமிழில் ஏபிசிடி, பம்பரக்கண்ணாலே, இந்திரலோகத்தில் இரு அழகப்பன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்திருந்த போது வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை வெளிப்படையாக கூறி கண்ணீர் விட்டு அழுத்துள்ளார்.

7 மாதங்களுக்கு முன் சர்க்கரை நோயால் என் கணவர் மரணமடைந்தார். அதுகுறித்து சினிமாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை.

என் மகள் படிப்பிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். கணவர் இருப்பதற்கு முன் நன்றாக இருந்த வாழ்க்கை கணவர் இறந்தப்பின் இல்லை. சாப்பட்டுக்கே நிற்கதியாக நிற்கிறேன் எனவும் தெரிவித்தார்.

prema priya-updatenews360

அப்பா, மாமனார், கணவர் என்று அடுத்தடுத்த மரணங்கள் பிரேம பிரியாவை தனிமையில் கொண்டு சென்றதாக ஷகீலாவின் சமீபத்திய பேட்டிகள் தெரிவித்துள்ளார்.

மேலும், சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் வடிவேலு தன்னை வளர விடாமல் இந்த நிலைக்கு மாற்றிவிட்டார் என்றும், அவரால் தான் தன் வாழ்க்கையே வீணாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.

bayilvan-ranganathan-updatenews360-4

இதுகுறித்து, பேசிய பயில்வான் ரங்கநாதன் பிரேமப்ரியா ஒரு நல்ல நடிகை அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், தன் வாழ்க்கையை வடிவேலு கெடுத்து விட்டார் என்றும், அவர் கூறியது ஒரு பொய்யான தகவல் என்றும், அது தவறான விஷயம் பிரேமப்ரியா வடிவேலுவை பயன்படுத்திக் கொண்டு தற்போது அவர் மீது பழி சுமத்துவதாகவும், வடிவேலுவை வைத்து தான் பிரேமப்ரியா பிரபலமானார் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!