Adjustment வேணும்னா அப்படியே ஓடி போய்டு.. பிரபலங்களிடம் கறார் காட்டிய நடிகை.. புகழ்ந்து தள்ளிய பயில்வான்..!

Author: Vignesh
4 July 2023, 6:30 pm

அஜித் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் சுவலட்சுமி. இவர் அஜித், விஜய் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.

Suvalakshmi-updatenews360

பெரும்பாலும், இவர் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் கனவு கன்னியாக அப்போதே வளம் வந்தவர். தற்போது சுவலட்சுமி குறித்து பல சுவாரசியமான தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

Suvalakshmi-updatenews360

அதாவது சுவலட்சுமி எந்த காரணத்திற்காகவும், தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கறாராக சொல்லி பல பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளாராம். மேலும், ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திர படங்களில் நடித்தால் கவர்ச்சியான காட்சியை அல்லது படத்தில் சில Adjustment கட்டாயம் இருக்கும் என்று இவர்களுடன் நடிக்கவும் மறுத்துள்ளாராம்.

Suvalakshmi-updatenews360

மேலும், பல நடிகர்களுடன் கிசுகிசுக்களில் இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஹீரோக்களுடன் எந்த ஒரு காதல் சர்ச்சையிலும், சிக்காத ஒரே நடிகை சுவலட்சுமி தான் என்று பயில்வான் ரங்கநாதன் ஒரே புகழ்ச்சியாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Suvalakshmi-updatenews360
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu