அப்பா செத்தும் விஜய் ஆண்டனி மாறல… ஒட்டுமொத்தமா பழி வாங்குது : சர்ச்சை பேச்சால் சிக்கிய பயில்வான் !!
Author: Vignesh21 September 2023, 6:30 pm
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.
இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பிலும் , இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. விஜய் ஆண்டனியின் மகள் லீரா (16) நேற்று முன்தினம் விடியற்காலை 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மகள் லீரா பள்ளியில் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிலையில், அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று காலை இறுதி சடங்குகள் முடிந்த பிறகு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை குறித்து பேசி உள்ளார். அதில் பயில்வான், நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சில விஷயங்கள் நடந்துவிடும். விஜய் ஆண்டனியின் படத்தின் தலைப்புகள் பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2, கொலைகாரன், ரத்தம், எமன் என வைத்திருந்தார். இது போன்ற படத் தலைப்புகள் அவரையே பழிவாங்க வாய்ப்பிருக்கிறது. இதேபோல் தான் ரஜினி காளி என்ற படத்தில் நடித்த போது சண்டைக்காட்சியில் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி பயில்வான் ரங்கநாதன் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை குறித்து பேசி உள்ளார்.