பகவத் கீதை, பைபிள் எல்லாம் வேலைக்காகாது… பலான விஷயம் தான் சரிபட்டு வரும்; பயில்வான் ஓபன் டாக்..!

Author: Vignesh
4 October 2023, 6:30 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.

உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது, மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

bayilvan ranganathan-updatenews360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பங்கேற்ற பயில்வானிடம் சினிமாவில் பேச பல நல்ல விஷயங்கள் இருந்தும் ஏன் நடிகைகளின் அட்ஜஸ்மென்ட் மற்றும் படுக்கை பற்றி மட்டும் பேசுகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் தான் பகவத்கீதை பற்றி பக்கம் பக்கமாக பேசினாலும், பைபிள் குறித்து பேசினாலும் யாரும் பார்க்க மாட்டார்கள். அட்ஜஸ்மென்ட் மற்றும் படுக்கை இந்த மாதிரி நடிகைகளை அப்படி பேசினால் தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று பயில்வான் கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ