அறந்தாங்கி நிஷா இப்படிப்பட்டவரா? பயில்வான் பேசினதை கேட்டு ஷாக் ஆன நெட்டிசன்ஸ்!
Author: Rajesh23 December 2023, 3:08 pm
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.
உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது, மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

பெரும்பாலும் பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் என்றாலே தரக்குறைவாக விமர்சிப்பவர் என்று மீடியாவில் முத்திரை குத்திவிட்டனர். ஆனால் தற்போது பயில்வான் ரங்கநாதன் முதன் முறையாக பெண் பிரபலம் ஒருவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஆம், அறந்தாங்கி நிஷா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் இறங்கி பாய், பெட்ஷீட், கொசுவலை, பிரட் , உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கியதை பயில்வான் பாராட்டியுள்ளார். அவர் பெரிய நடிகைகளுக்கு நிகராக கோடி கணக்கில் சம்பாதிக்கல… ஆனாலும் அவரிடம் இருந்ததை கொடுத்து உதவிய அந்த மனதை பயில்வான் பாராட்டியுள்ளார். முதன்முறையாக பயில்வான் பெண் பிரபலம் ஒருவரை பாராட்டி பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.