சான்ஸ் கிடைச்சா கிஸ் அடிச்சுடுவாரு… நடிகைகளும் அதுக்கு காத்துகிட்டு இருப்பாங்க!

Author: Shree
28 April 2023, 9:33 pm

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திரையில் அவர் நடிப்பு ஜாம்பவானாக இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறார். அவரது திறமையை கண்டு ஒட்டுமொத்த திரை உலகமும் வியந்து பாராட்டினாலும். அவ்வப்போது சக நடிகைகளுடன் தொடர்ந்து பல வருடங்களாக கிசுகிசுக்கபட்டு தான் வருகிறார்.

நடிகைகளுடன் நெருங்கி பழகும் அந்த மாதிரியான விஷயங்களில் காதல் மன்னன் ஜெமினி கணேசனையே ஓவர் டேக் செய்திடுவார் கமல். அப்டித்தான் தற்போது பிரபல சர்ச்சை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கமலின் லீலைகள் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, கமல் ஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வேண்டும் எனக் கூறி எல்லா நடிகைகளுடன் நெருங்கிப் பழகுவார். சான்ஸ் கிடைச்சா போதும் கிஸ் அடிச்சிடுவார். அதற்கு நடிகைகளும் காத்திருப்பார்கள். அந்த காலத்தில் இருந்தே கமல்ஹாசன் நடிக்கும் படங்களில் கட்டாயம் உதட்டோடு உதடு வைக்கும் முத்தக் காட்சி இடம்பெற்று இருக்கும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 474

    6

    0