சினிமாவை விட அதிகம் வருமானம் வருதா? பேச்சுவாக்குல உண்மையை கக்கிய பயில்வான்!
Author: Shree18 July 2023, 3:26 pm
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.
உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது, மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” லவ் டுடே நடிகர் பிரதீப் ரங்கநாதனை யாராச்சும் ஹீரோவா ஒதுக்குவாங்களா? ஒத்துக்கிட்டாங்களே..? அப்படித்தான் எனக்கும் சினிமாவில் நடிப்பதை விட யூடியூபில் பேசுவதன் மூலம் அதிகம் வருமானம் கிடைக்கிறது.
எனவே மக்கள் ரசிப்பது போன்று பேசுங்கள். எந்த துறையாக இருந்தாலும் நீங்கள் தனித்துமாக வேலை செய்யங்கள். ரசிக்குற மாதிரி படம் எடுங்கள். அப்படி எடுத்தால் எல்லோரும் கொண்டாடுவார்கள் என பயில்வான் பேசியுள்ளார்.