விஜய்யின் தலைமுடியில் இந்த பிரச்சினை இருக்கு.. புது குண்டை தூக்கி போட்ட பயில்வான் ரங்கநாதன்..! இணையத்தில் சலசலப்பு..!

Author: Vignesh
7 December 2022, 10:56 am

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர். தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் ஒருசில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். இந்நிலையில் விஜய்யின் தலைமுடிக்கு என்ன பிரச்சனை என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு குண்டைத்தூக்கி போட்டுள்ளார்.

Vijay - Updatenews360

நடிகர் விஜய்க்கு தலைமுடி உதிர்ந்துவிட்டதால் விக்கினை போட்டு வந்துள்ளார். ஆனால் இன்றுவரை வெள்ளை முடி இருந்தாலும் அவரது அப்பா, அம்மாவிற்கு இந்த பிரச்சனையில்லை.

ரசாயனம் கலந்த சிலவற்றை போட்டதால் விஜய்க்கு இப்படியொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் வேறுமாதிரியான முடிவை எடுத்து வந்தனர்.

Vijay Kiss- Updatenews360

இதற்கு எதிர்மாறாக ஒவ்வொரு நாளும் தோப்பாவை மாற்றிமாற்றி வந்துள்ளார் விஜய். அப்படி விஜய் வைக்கும் தோப்பாவை அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்த்து வருகிறார்கள். இதனால் விஜய்யை ஒரே தலைப்பாகையை பயன்படுத்துங்கள் என்று பயில்வான் ரங்கநாதன் வேண்டுகோளாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் என் மகனே விஜய் ரசிகர் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி