“எனக்கு ஸ்பான்ஸ்சர் கிடைக்கல”.. பயில்வானிடம் புலம்பிய அஜித்: இது என்னடா புது புரளியா இருக்கு..!

Author: Vignesh
5 April 2023, 1:30 pm

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கிற்காக இவர் காத்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அஜித் பைக் பயணங்களை மேற்கொண்டு வந்தார்.

இப்படியிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அஜித்குமாரின் தந்தை மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

ajith -updatenews360

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

bayilvan ranganathan - updatenews360.png h

பல மேடைகளிலும் பேட்டிகளிலும் சர்ச்சையாகவும் அவதூறாகவும் பேசி வரும் பயில்வான் தற்போது அஜித் குமார் பைக் ரேஸ் செய்யாமல் அதை நிறுத்த காரணம் என்ன என்பதை சமீபத்திய நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

அதாவது, ரேசர் என்ற படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பயில்வான் ரங்கநாதன். சங்கங்களை குறை சொல்வதை நிறுத்துங்கள் என்றும், சினிமா தொழிலை கற்றுக்கொள்வதைவிட எப்படி வெளியிடுவது என்று கற்றுக்கொண்டு படம் எடுங்கள் என்று அறிவுரை கூறி இருக்கிறார்.

மேலும், விழாவில் பேசியபோது, அஜித்தாலே முடியல, பைக் ரேஸில் கலந்துக்கிறதுக்கு 7 வருடத்திற்கு முன்பு தன்னிடம் அஜித் புலம்பினார் எனவும், தனக்கு ஸ்பான்ஸ்சர் கிடைக்கவில்லை எனவும், அதற்கு முன்னாடி நிறைய பேசினார் என்றும், ஒரு பைக் 1 கோடி ரூபாய் இருந்ததால் தான் அஜித் ரேஸ் செய்வதை நிறுத்தினார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். இதனை ரசிகர்கள் இது என்னடா புது புரளியா இருக்கு என கேளி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!