திருநங்கைகளை கூட வைத்திருக்க இது தான் காரணம்.. ஷாக் பதிலால் பயில்வானை பஞ்சர் ஆக்கிய ஷகிலா..!
Author: Vignesh15 February 2023, 3:30 pm
சினிமாவில் பிரபலமானவர்கள் குறித்து கிசு கிசுக்கள் வருவது சகஜம்தான். இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவில் இது சகஜம் என கடந்து விடுவார்கள்.
ஆனால் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய ரகசியங்களை சமீபகாலமாக ஓபனாக கூறி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். இப்படி எல்லாம் நடந்திருக்கா என ரசிகர்களும் வாயை பிளக்கும் அளவுக்கு பல்வேறு விஷயங்களை பற்றி யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார்.
பயில்வானுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தாலும் , ஒரு சிலர் இவரது கருத்துகளை வரவேற்று வருகன்றனர். என்ன நடந்தாலும் எதையும் காது கொடுத்து வாங்காமல் பயில்வான் தொடர்ந்து யூடியூப்பில் பல நடிகர்கள், நடிகைகள் குறித்து விமர்சித்து வருகின்றார்.
இந்த நிலையில் நான் உண்மையை தான் பேசுகிறேன், நான் வெளியிடும் செய்திகளை பற்றி பல அவதூறுகள் வந்து கொண்டிருக்கிறது. ஆதாரம் இல்லாமல் நான் எந்த விஷயத்தையும் சொல்வது கிடையாது. நீங்கள் பார்க்கும் திரைக்குப் பின்னால் பல நிகழ்வுகள் இருக்கிறது.
திரைக்கு பின்னால் நடப்பவையெல்லாம் உண்மையே, அதை நான் வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். நான் யாரையும் பற்றி அவதூறாக கருத்து சொல்ல வேண்டியது இல்லை.. என்னிடம் சாட்சி உள்ளது என்று பயில்வான் கூறியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
அந்தவகையில் நடிகை ஷகிலா எடுத்த பேட்டியொன்றில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து உள்ளார்.
அப்படி ஷகிலா பயில்வானிடம், என்னை பற்றிய ஒரு கிசுகிசுவை கூறுங்கள், நான் பீச்சிற்கு வாக்கிங் எல்லாம் வரமாட்டேன் என்று கிண்டலாக கேட்டுள்ளார். அதற்கு பயில்வான், கிசுகிசு எல்லாம் கிடையாது, எனக்கு தெரிந்தவரையில், ஷகிலா ஏன் திருநங்கைகளை கூட வைத்து உதவி செய்ய நிறுவனம் வைத்திருப்பது பல திருங்கைகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறீங்க ஏன் என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு ஷகிலா நான் அசோஷியேசன் வைத்துக்கொண்டு எல்லாம் அதை செய்யவில்லை. நான் அவர்களை மகளாகவும் என்னை அவர்கள் அம்மாவாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று வெளிப்படையாக நடிகை ஷகிலா கூறியிருக்கிறார்.