‘நாம் ஒரே குடும்பம்’… அப்போ உங்க அம்மா, அப்பா என்ன தனி குடும்பமா?.. ‘வாரிசு’ ட்ரெய்லர் குறித்து விஜய்யை விளாசிய பயில்வான்..!

Author: Vignesh
5 January 2023, 6:45 pm

இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

Vijay - Updatenews360

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன்.

Vijay Pawan - Updatenews360

இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில், வாரிசு படம் குடும்ப ரீதியான பாடமாக இருப்பது போன்று அமைந்துள்ளது. விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என பக்கா கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த டிரைலராக இது இருந்தாலும், இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் கடும் அப்செட் ஆகி உள்ளனர்.

Varisu Trailer - Updatenews360

இப்படத்தின் இயக்குனர் தமிழ் படங்களின் சாயலில் தான் வாரிசு படத்தை எடுத்திருக்கிறேன் என்று சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் சிலர் வாரிசு படம் மகேஷ் பாபு படங்களின் ரீமேக் போன்று இருக்கிறது என ட்ரைலர் பார்த்த பின் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து வாரிசு திரைப்படம் ட்ரைலர் மெகா சீரியல் போல இருக்கிறது. இதற்கு முன்பு தமிழ் படங்களில் வந்த கதையே தான் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பாரபட்சம் பார்க்காமல் ட்ரோல் செய்கின்றனர் .

Vijay Rashmika -Updatenews360

இந்நிலையில் வாரிசு ட்ரெயிலர் குறித்த பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தை வீடியோவாக ஷேர் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் விஜய் இதற்கு முன்பு இது போன்ற ஒரு கதையில் நடித்ததில்லை என்று பேசி இருந்தார். படத்தில் கூட்டுக் குடும்பத்தின், சுவாரசியம், காதல், ஆக்ஷன் என அனைத்தும் உள்ளது. ட்ரெயிலரே ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் இருக்கிறது.

bailwan -updatenews360-1

வாரிசு ட்ரெயிலர் தொடங்கும் போதே இது கல்லால் கட்டப்பட்ட வீடு அல்ல என விஜய்யின் அம்மா ஆரம்பிக்கிறார். விஜய்யும் குடும்பத்தில் குறை இருக்கலாம், ஆனால் நாம் ஒரே குடும்பம் என தெரிவித்த நிலையில், வாரிசு ட்ரெயிலர் குறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், ஒரே குடும்பம் என விஜய் கூறுவது, தனது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகளை சொல்கிறாரா? அவரது அம்மா ஷோபா, அவரது அப்பா சந்திரசேகர் ஆகியோர் தனி குடும்பமா? என்றும் கேள்வி பயில்வான் ரங்கநாதன் எழுப்பியுள்ளார். மேலும் சினிமாவில் மட்டும்தான் கூட்டுக் குடும்பமா? சொந்த வாழ்க்கையில் ஏன் கூட்டு குடும்பமாக இல்லை என்றும் பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

shoba chandrasekhar vijay - updatenews360

வாரிசு படத்திற்கு 120 கோடி ரூபாய் சம்பளம் விஜய் பெற்றுள்ளார் என்றும், விஜய்யின் வெற்றிக்கொடி தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நாட்டப்பட வேண்டும் எனவும், மேலும் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றும் தனது வாரிசு ட்ரெயிலர் விமர்சன வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 589

    2

    1