“விக் இல்லாம அவரை பார்த்தா கண்டேபிடிக்க முடியாது”.. பிரபல நடிகரை சீண்டிய பயில்வான்..!

Author: Vignesh
1 March 2023, 4:30 pm

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

அந்தவகையில், கவுண்டமணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் பயில்வான் ரங்கநாதனும் டாப் ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். தற்போது கவுண்டமணியின் விக் ரகசியங்களை பற்றி பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

bayilvan-ranganathan-updatenews360

சோலோவாக பல படங்களில் காமெடி செய்து கலக்கி வந்த கவுண்டமணி பின்னர் நடிகர் செந்திலுடன் சேர்ந்து சினிமாவில் காமெடி ரகளை செய்து ரசிகர்களை கவர்ந்தவர் என்று செல்லலாம். இன்று வரையிலும் அவர்களின் காமெடி காம்போவை எந்த நடிகராலும் பீட் செய்ய முடியவில்லை.

இதனிடையே, பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த ரகசியங்களையும் பகீர் தகவல்களையும் வெளியிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் நடிகர் கவுண்ட மணியை விக் இல்லாமல் பார்த்தால் கண்டுப்பிடிப்பது ரொம்ப கஷ்டம் என ஓபனாக கூறியுள்ளார்.

goundamani-updatenews360

ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு செல்ல ஈரோடு ரயில் நிலையத்தில் கவுண்டமணி காத்திருந்தாராம். அப்போது கவுண்டமணி விக் இல்லாமல் இருந்ததால் அவரை அடையாளம் தெரியாமல் அவரை கடந்து பயில்வான் ரங்கநாதன் சென்று விட்டாராம்.

இதை பார்த்த கவுண்டமணி, என்னய்யா ரசிகர்களுக்கு தான் நான் விக் இல்லாமல் என்னை அடையாளம் தெரியாது என்றும், உனக்குமா தெரியாது என பயில்வான் ரங்கநாதனிடம் கேட்டுள்ளாராம். இந்த தகவலை நடிகரும் விமர்சகருமான பயின்வான் ரங்கநாதன் தற்போது வெளியிட்டுள்ளார்.

goundamani - updatenews360.jpg 2

அப்போது நடந்ததை எல்லாம் இப்போது பயில்வான் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார். இந்த முறை கவுண்டமணியையும் அவருடைய விக் ரகசியங்களை பற்றியும் உடைத்துப் பேசியது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1218

    13

    19