புதிய படங்களை தவிர்க்க… காரணம் இதுதான்? நயன்தாரா குறித்து பகீர் தகவலை கூறிய பயில்வான் ரங்கநாதன்..!
Author: Vignesh8 October 2022, 2:10 pm
கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த கையோடு விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி கடந்த இரண்டு மாதங்களாக ஸ்பெயின் மற்றும் துபாயில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் நடிகை நயன்தாரா காதல் கணவரின் பிறந்தநாளை துபாயில் கலக்கலாக கொண்டாடினார்.
அவர் கொடுத்த சர்ப்ரைஸ் ஆல் உருகிப்போனார் விக்னேஷ் சிவன். இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படி ஒரு காதல் மனைவியை கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறினார்.
இதனிடையே, நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடிய போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், நயன்தாரா குறித்து பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனது யூட்யூப் சேனலில் பகீர் தகவலைத் தெரிவித்துள்ளார். அதாவது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் நயன்தாராவுக்கு, வயது அதிகம் ஆகிவிட்டதால் சிக்கல் ஏற்படும் என மருத்துவரை அணுகி உள்ளதாகவும், பரிசோதித்த மருத்துவர்கள் 9 மாதங்கள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என கூறியுள்ளதால், சினிமாவில் இருந்து விலக நயன்தாரா முடிவு செய்துள்ளார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன் ஒரு பெண் தாயாகும் போதுதான் அவருடைய வாழ்க்கை முழுமை அடைகிறது என இந்து மதம் கூறுகிறது என தெரிவித்துள்ளார். தாயாக வேண்டும் என்பது பெண்களுக்கு உள்ள இயல்பான ஆசைதான் எனவும், மேலும் நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் தாலியை கழட்டமாட்டேன் என்று நிபந்தனையுடன் தான் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறியுள்ள பயில்வான் கதை சரியில்லை என வரும் வாய்ப்புகளையும் அவர் தட்டிக் கழித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு இந்திப் படத்தில் தான் கமிட் ஆகி, அதிலும் கொஞ்ச காட்சிகள்தான், நடித்து முடித்து விட்டார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சினிமாவில் இருந்து ஒதுங்கவுள்ளதாகப் பயில்வான் கூறியிருப்பது நயன்தாரா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.