தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும் நிறைய படங்களில் துணை நடிகராக தலைக் காட்டியுள்ளார். தற்போது சர்ச்சைக்குறிய வகையில் பேட்டிகளை அளித்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என சொல்லி பல அந்தரங்க மற்றும் யாரும் கேள்விப்படாத விஷயங்கள் பலவற்றையும் கூறி வருகிறார். சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பாரபட்சம் இன்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
என்ன தான் இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், நடிகைகள் குறித்து அவதூறாக பேசுவதை பயில்வான் ரங்கநாதன் நிறுத்தியபாடில்லை. இந்நிலையில், அஜித் மற்றும் விஜய் குறித்து கம்பேர் செய்து இவர் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் – அஜித். திரைத்துறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.
இதனைத் தொடர்ந்து, இருவரும் அடுத்த படங்களில் கமிட் ஆகினர். இதில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து, அத்திரைப்படமானது வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால், அஜித் முதலில் விக்னேஷ் சிவனை கமிட் செய்து பின்னர் ரிஜெக்ட் செய்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதன் பிறகு எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
இதனால், தளபதி Vijay நடிச்சு முடிச்சுட்டு ரெஸ்ட் எடுக்க foriegn போய்ட்டாரு.. தல Ajith இன்னும் படம் ஷூட்டிங் கூட ஸ்டார்ட் பண்ணல என பயில்வான் பேசியுள்ளார்.
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
This website uses cookies.