பச்சையா ஏதாவது சொல்லிடுவேன்..! பயில்வான் சாகுற நாள் தான் எனக்கு தீபாவளி.. கொந்தளித்த நடிகை..!

Author: Vignesh
1 March 2023, 1:30 pm

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார்.

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

அந்த வகையில், இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் பற்றி கொச்சையாக விமர்சனம் செய்து இருந்தார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகை ரேகா, வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வானை மடக்கிப் பிடித்து அடிக்க பாய்ந்தார்.

இதனால் மிரண்டு போன பயில்வான் விட்டால் போதும் என, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இவர்களுக்கிடையேயானா இந்த மோதலை தொடந்து, ரேகா நாயர் ஒரு பேட்டியில் பயில்வானை வெளுத்து வாங்கி உள்ளார்.

அந்த பேட்டியில், தனக்கு உண்மையான தீபாவளி பயில்வான் என்றைக்கு சாகுறாரோ, அன்னைக்கு தான் என்றும், என்ன பத்தி எவ்ளோ கேவலமா பேசிட்டாரு, அந்த ஆளுக்கு இப்படி பேசுவதால் என்ன கிடைக்கிறது என விளாசியுள்ளார். மேலும் அவர் தனக்கு அந்த ஆள பார்த்தாலே, அவ்வளவு காண்டாகுது என்றும், தயவு செய்து இதுக்கு மேல இந்த ஆள பத்தி கேக்காதீங்க அப்புறம் பச்சையா ஏதாவது சொல்லிடுவேன் என தனது மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தது தற்போது வைரலாகி வருகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 480

    0

    1