அந்த விஷயத்திற்கு த்ரிஷாவை வற்புறுத்திய விஜய்? பகீர் கிளப்பும் பயில்வான்..!
Author: Vignesh26 June 2024, 12:12 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை திரிஷா சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அப்படி சென்சேஷனலாக இருக்கிறார். அதற்கு காரணம், அவர் மீது அவர் மீது எழும் விமர்சனங்கள் தான். மன்சூர் அலிகான் முதல் பிரபல கட்சித் பிரமுகர் வரை திரிஷாவை அவதூறாக பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் பெரிசாக வெடித்தது.
இதனை தொடர்ந்து, பல்வேறு விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தன்னுடைய படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் திரிஷா. அஜித்தின் விடாமுயற்சி கமலின் Thug life போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் விஷ்வம் பரா என்ற படத்தில் நடித்துள்ளார். 68 வயது நடிகருடன் ரொமான்ஸா என்று சில விமர்சனங்களும் வந்தன.
இந்நிலையில், த்ரிஷா குறித்து பேசிய பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விஜய் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு தனக்கான கதாநாயகிகளை தானே செலக்ட் செய்ய ஆரம்பித்தார். இதுவரை த்ரிஷா எந்த ஒரு படத்திலும் பாடலுக்கு நடனம் ஆடியதில்லை. ஆனால், தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். விஜயின் வற்புறுத்தலின் பெயரில் தான் த்ரிஷா கோட் படத்தில் நடனம் ஆட சம்மதம் தெரிவித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.