விஜய் சேதுபதிக்கு லக் அடிக்க காரணமே அவங்கதான்.. பிரபலம் சொன்ன உண்மை!.

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2024, 4:38 pm

நடிப்பதற்கு முன் துபாயில் விஜய் சேதுபதி அக்கவுண்டன்டாக வேலை பார்த்து வந்துள்ளார். சென்னையில் வேலை பார்த்து வந்தவர் ஜெஸ்ஸி. அவரும் அக்கவுண்டன்டாக பணியாற்றி வந்துள்ளார்.

இரண்டு பேரும் தொழில் ரீதியாக பேசிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். அது நாளடைவிவல் காதலாக மாறியுள்ளது.

2003ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் ஆசைகளோடு விஜய் சேதுபதி சென்னை வந்துள்ளார். BE படித்து அக்கவுண்டன்டாக வேலை செய்த பின் சினிமாவுக்கு வந்துள்ளீர்கள் என விமர்சனம் எழுந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் நடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

அந்த சமயத்தல் சாப்பாடுக்கு கூட காசு இல்ல. அப்போதுதான் ஜெஸ்ஸியை திருமணம் செய்துள்ளார். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு, ஆனால் அதை மீறி திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்க: ரகசிய மனைவியான நடிகையின் சகோதரி.. சிவாஜி மகன் செய்த சதி!

பின்னர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்தார். அந்த சமயத்தில் ஜெஸ்ஸி தான் பணம் கொடுத்துள்ளார். பின்னர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கிடைத்த வாய்ப்பு அவரின் வாழ்க்கையை மாற்றியது.

இன்றைக்கு அவரின் ரேஞ்ச் உயர்ந்தது. இந்த ஜோடிக்கு ஸ்ரீஜா, சூர்யா என இருகுழந்தைகள். இதில் சூர்யா படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீஜா பாடகியாக அறிமுகமாக உள்ளார். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்