எனக்கும் பாடி டிமாண்ட் இருக்கு.. ரூமுக்கு வா நான் யாருன்னு காட்டுறேன்.. கீழ்த்தரமாக பேசிய பயில்வான்..!(வீடியோ)

Author: Vignesh
12 December 2023, 4:00 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும். இந்த நிலையில், தனியார் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த பயில்வான் தொகுப்பாளனி ஒருவரை படு கேவலமாக பேசி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தற்போது, பேசுவது அவர்களின் குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா என்று தொகுப்பாளினை கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பயில்வானுக்கும் தொகுப்பாளினிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது கோபமான பயில்வான் வெயிட்க்கும் உடம்புக்கும் எட்டி மிதிச்சா சட்டினி ஆய்டுவ என்று கூறினார்.

bayilvan ranganathan

அதற்கு தொகுப்பாளினி முன்னாடிதான் நீங்க பயில்வான் இப்போ நீங்க நொந்த பயில்வான் என்று தொகுப்பாளினி பதிலடி கொடுத்தார். இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பயில்வான் தொகுப்பாளினியிடம் எனக்கு பாடி டிமெண்ட் அதிகம், ரூமுக்கு வா நான் பயில்வானா இல்லையா என்பதை காட்டுகிறேன் என்று தொகுப்பாளினியிடம் மோசமாக பேசினார். இந்த எல்லை மீறிய பேச்சுக்கு நெட்டிசன்கள் தற்போது, கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=ncDDHflQyXo
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 626

    0

    0