சூர்யாவை கிளப்பி விட்டுட்டு… நடிகையின் பக்கத்திலேயே ரூம் போட்டுக்கொண்ட பாலா…? வணங்கான் படம் குறித்து பகீர் கிளப்பிய பயில்வான்..!
Author: Vignesh8 December 2022, 12:30 pm
கடந்த ஆண்டு பூஜை போட்டு இயக்குனர் பாலா – சூர்யா கூட்டணியில் பாதி படப்பிடிப்பினை ஆரம்பித்து முடித்திருந்தார்.
வணங்கான் என்ற பெயரும் சூர்யா 41 படத்திற்கு வந்து கூடிய சீக்கிரம் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கதை போக்கு மாறிப்போனதால் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலக்கிவிடப்பட்டதாக பாலா அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு காரணம் பாலா, சூர்யா இடையே கருத்து வேறுபாடும் சண்டையும் தான் காரணம் என்று கூறிப்படுகிறது. அதன்பின் அதர்வா தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சில மாதங்களுக்கு முன் இயக்குனர் பாலா பற்றிய உண்மையை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அதில் இயக்குனர் பாலா, கதாநாயகி கீர்த்தி ஷெட்டி உட்பட சிலருக்கு மட்டும் கன்னியாக்குமரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நாகர்கோவில் பக்கமாக ஒரு ஓட்டலில் ரூம் புக் செய்துள்ளனர்.
இதனால் படப்பிடிப்புக்கு சீக்கிரமாக வருவதில் சிக்கலாகியுள்ளதாம். ஏன் ஹீரோவுக்கு மட்டும் தனியாக ரூம் புக் செய்துவிட்டு அவர்களுக்கு அவ்வளவு தொலை தூரத்தில் ரூம் புக் செய்திருக்கிறார் என்ற கேள்வியும் சூர்யா கேட்டிருக்கிறாராம்.
மேலும் பாலா கூறியதால் படத்திற்காக 25 லட்சம் செலவில் குடியிருப்பும் கட்டி ஷூட் முடிந்து அதை மீனவர்களுக்கு கொடுக்கும் பிளானை சூர்யா செய்திருந்தாராம். ஆனால் அந்த இடத்தில் ஷூட்டிங் வைக்க வேண்டாம் என்று பாலா அதிர்ச்சியை சூர்யாவுக்கு கொடுத்துள்ளார் என்ற செய்தியையும் பயில்வான் கூறியிருக்கிறார்.
இது தெடர்பாக, பயில்வான் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.