சுமாரான படம் தான் சூப்பர் எல்லாம் சொல்ல முடியாது.. அதிதி வேஸ்ட்.. சிவகார்த்திகேயனை பங்கம் செய்த பயில்வான்..!

Author: Vignesh
15 July 2023, 5:30 pm

மனோன் அஸ்வின் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் மாவீரன். இந்தப் படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

maaveeran updatenews360

பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் ரஜினிகாந்த் நடித்த மாவீரன் படமே ஓடவில்லை என்றும், அப்படி இருக்கையில், சிவகார்த்திகேயன் ஏன் அந்த டைட்டிலில் இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் என்று கலாய்த்து இருக்கிறார்.

bayilvan ranganathan-updatenews360

மேலும் படத்தில் சரிதா சிறப்பாக நடித்திருப்பதாகவும், அதே ஷங்கருக்கு இதற்கு முன் விருமன் படத்தில் கிடைத்த அளவுக்கு சரியான ரோல் கிடைக்கவில்லை என்றும், தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் அதிதி ஷங்கரின் முகம் அழகாகவும் இல்லை கவர்ச்சியாகவும் இல்லை. நடிப்பும் முகத்தில் வரவில்லை சுத்த வேஸ்ட் என்றும் கூறியிருக்கிறார். மேலும், ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் இந்த படம் உப்புசப்பில்லாத கதை எனவும் பங்கமாய் விமர்சித்து இருக்கிறார்.

maaveeran updatenews360

ஆனால் மனோன் எந்த அளவுக்கு கதையை சுவாரசியமாக கொண்டு செல்ல முடியுமோ அதை செய்திருப்பதாகவும், மனோன் அஸ்வினுக்கு பதில் மடோனா செபஸ்டின் இயக்கிய படம் என கேவலமாக பேசியுள்ளார். மேலும் இந்த மாவீரன் படம் சுமாரான மூவி தான் சூப்பர் என்றெல்லாம் சொல்ல முடியாது ஒரு முறை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் பயில்வானை பயங்கரமாய் திட்டி வருகிறார்கள்.

maaveeran updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 497

    2

    1