மேடையில் அஜித்தை அசிங்கப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்.. பதிலுக்கு AK -என்ன செஞ்சாரு தெரியுமா? உண்மையை உடைத்த பயில்வான்..!
Author: Vignesh20 November 2022, 10:45 am
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் அறியப்பட்டவர் அஜித் குமார். முன்னணி இடத்தில் இருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், துணிவு படத்தில் நடித்துள்ளார்.
வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் அஜித்தை மேடையில் அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

விஜய்யை வைத்து குஷி, கில்லி, சிவகாசி போன்ற படங்களை தயாரித்த ஏ எம் ரத்னம் கில்லி படம் வெற்றியை கொண்டாடும் போது நிகழ்ச்சியில் அஜித் என்பவர் காணாமல் போய்விடுவார் என்று தெலுங்கில் பேசித்தள்ளினார்.
இதன்பின் 5 வருடம் காணாமல் போய் நஷ்டத்தால் படங்களை எடுக்காமல் நடுத்தெருவுக்கு சென்றார். இதனை அறிந்த அஜித், நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறி ஆரம்பம் படத்தினை கொடுத்தார்.

அதன்பின் என்னை அறிந்தால், வேதாளம் போன்ற படங்களை கொடுத்து அவரின் கடனை அடைக்க காரணமாக அமைந்தார். இதற்கு மேடையில் ஏ எம் ரத்னம் அஜித்தை பாராட்டியும் பேசினார்.