பிரசன்னாவுடன் விவாகரத்து..! சினேகா விவாகாரம் குறித்து உண்மையை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
19 November 2022, 10:15 am

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

திருமணம் To விவாகரத்து

அதன்பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்றார். தற்போது மீண்டும் வெள்ளித்திரை சின்னத்திரை என்று ரிஎண்ட்ரி கொடுத்து வருகிறார்.

sneha - updatenews360.jpg 2

அப்படி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். நடிகை சினேகா பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது. இதெல்லாம் பொய் என்று சினேகா கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டும் பிரசன்னா டிவிட் செய்தும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

பயில்வான்

இந்நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் உண்மையை பகிர்ந்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்த வதந்திகளை வெளியிட்டு வருவது மிகவும் தவறு என்று கூறியுள்ளார். மேலும் பிரசன்னா மூன்றாம் ஆண்டு டாக்டர் பட்டப்படிப்பு பயிலும் போது அதை நிறுத்திவிட்டு நடிப்பு மீது ஆர்வம் கொண்டு அதை உதறிவிட்டு நடிக்க ஆரம்பித்தார்.

bailwan -updatenews360-1

வாய்ப்பே இல்லை

சினேகாவுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை என்றும் இரவு பார்ட்டிக்கு சென்ற போது தான் இயல்பான வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்து புன்னகை அரசியாகினார். வெளிநாட்டில் படப்பிடிப்பு சென்ற போது காதல் உருவாகி இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

sneha prasanna - updatenews360

எந்த சூழலிலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் யாரோ உள்நோக்கத்துடன் இதனை பரப்பி வருகிறார்கள் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த விசயத்திற்காக ஊடகங்கள் சினேகாவிடம் நேரலை கேட்டுள்ளனர். ஆனால் சினேகா படப்பிடிப்பில் இருப்பதால் அவகாசம் கேட்டும் அதற்காக பணம் கேட்டதற்காக சினேகா மீது இப்படியான வதந்திகளை பரப்பி வருவதாக பயில்வான் கூறியுள்ளார்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…