பணத்துக்காக இப்படியா.? பிரபல நடிகையை மோசமாக வர்ணித்த பயில்வானை வெளுத்து வாங்கிய காமெடி நடிகர்..!

Author: Vignesh
6 October 2022, 4:00 pm

சினிமாத்துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை, படங்களில் நடிப்பது பற்றி அவதூறாக பேசி அசிங்கபடுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். ஒரு பத்திரிக்கையாளராகவும் நடிகராகவும் இருந்துள்ள பயில்வான் இப்படி கேவலமாக நடந்து கொண்டதை பலர் கண்டித்து புகாரும் அளித்து வந்தனர்.

அதை மீறியும் பயில்வான் ரங்கநாதன் கடும் விவாதங்களையும் கருத்துக்களையும் கூறி வருகிறார். சமீபத்தில் கூட இரவின் நிழல் படத்தில் நடித்து ரேகா நாயரிடம் சண்டை போட்ட வீடியோ வைரலனாது. இதனை தொடர்ந்து பல நடிகைகளை பற்றி படுமோசமான வார்த்தையில் விமர்சித்தும் வந்தார்.

இந்நிலையில் பயில்வான் குறித்து பிரபல காமெடி நடிகர் டெலிஃபோம் ராஜ் பேட்டியொன்றில் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவருக்கு வயசாகிவிட்டது. அவரால் எழுந்து கூட நடக்க நிற்க முடியாது.

அதனால் குடும்ப குட்டிகளை காப்பாற்ற யூடியூப் மூலம் நடிகைகளை பற்றி கேவலமாக பேசி காசு சம்பாதித்து வருகிறார். அப்படி நடிகைகளின் நடவடிக்கையை பற்றி பேசும் பயில்வான், நடிகை நமீதாவின் உடல் மிகவும் எடுப்பாக இருக்கும் என்று வர்ணித்து பேசி வீடியோவையும் வெளியிட்டார்.

அப்படியென்றால் அவரும் நடிகைகளை ரசிப்பவர் தானே என்று கூறியுள்ளார். அடுத்தவன் படுக்கை அறையில் எதற்காக பயில்வான் நுழைகிறார் என்று பாய்ந்து பேசியுள்ளர் டெலிஃபோம் ராஜ்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி