குழந்தை வேணும்.. அடம் பிடிக்கும் 49 வயது நடிகையை கிண்டல் செய்யும் பயில்வான்..!

Author: Vignesh
26 April 2024, 4:45 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர். தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பாட்சா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க: VijayTV மட்டுமில்லாமல் அந்த தொழில் செய்யும் மணிமேகலை.. லட்சங்களில் கிடைக்கும் வருமானம்..!

குறிப்பாக இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனிடையே கிரிக்கெட் வீரர் கங்குலியை ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள். அதன் பின் அரசியலில் குதித்த அவர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.

மேலும் படிக்க: உச்ச நடிகையின் Ex காதலருடன் டேட்டிங்… காதலை ஒப்புக்கொண்ட நடிகை பிந்து மாதவி..!

தற்போது 49 வயதாகும் நக்மா திருமணம் செய்துக்கொள்ளாமல் திரைப்படங்களில் கூட நடிக்காமல் தன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நக்மா திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன் திருமணம் செய்துக்கொள்ளவேண்டிய சமயங்களில் விட்டுவிட்டு இப்போ வந்து திருமணம் செய்துக்கொள்ளவேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், 49 வயது கிழவியை எந்த தொழிலதிபர்கள் தான் திருமணம் செய்ய முன்வருவார்கள். முடிந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பயில்வான் கிண்டலாக பேசியுள்ளார். தற்போது 49 வயதாகிய நடிகை நக்மா ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?