நடிகை ஜோதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் மும்பைக்கு குடியேறி விட்டார். இந்த சூழலில், இந்தி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, தனது புதிய படமான ஸ்ரீகாந்த் படத்துக்கு புரமோஷன் செய்யும் வகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நடிகர் சூர்யா தனது தந்தை மற்றும் தம்பியுடன் ஓட்டுப் போட வந்த நிலையில், நீங்கள் மட்டும் ஓட்டுப்போட வராதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் படிக்க: அப்படி நடந்தா உனக்கு சங்கு தான்.. ஆல்யா மானசா வெளியிட்ட Video.. விளாசும் நெட்டிசன்கள்..!
அந்தக் கேள்விக்கு பதில் அளித்த ஜோதிகா ”ஒவ்வொரு வருஷமும் ஓட்டுப் போடுறேன். இந்த தடவை மிஸ் ஆகிடுச்சு” என்றார். உடனடியாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் ஓட்டு போட முடியும் என பத்திரிக்கையாளர்கள் சொன்ன நிலையில், சற்று ஜெர்க்கான ஜோதிகா, “ஸாரி.. ஊரில் இல்லை, பர்ஷனல் விஷயம் காரணமாக ஓட்டுப் போட வரமுடியவில்லை,” என பதில் அளித்துள்ளார். மேலும், ஆன்லைனிலும் ஓட்டுப்போடலாம் என்று அவர் கூறியது விவாதப் பொருளாகியுள்ளது.
மேலும் படிக்க: CWC 5 போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. வாயை பிளக்க வைத்த பிரியங்கா..!
இந்நிலையில், இது குறித்து பேசிய பயில்வான் ஜோதிகா ஃபுல் போதையில் உளறினாரா என்று ஆரம்பித்து, சென்னையில் படத்தின் ப்ரோமோஷனுக்கு மும்பையில் இருந்து சென்னை பறந்து வந்தவர். விமானத்தில் பறந்து வந்து சென்னை விமான நிலையத்தில் தங்கிவிட்டு பேட்டியும் கொடுத்துவிட்டு மும்பைக்கு கிளம்பிவிட்டார். நான் முன்பே கூறினேன் ஜோதிகாவுக்கு சென்னை என்றாலே வேப்பங்காய் போல் கசக்கிறது. மாமனார், மாமியார் முகத்தில் முழிக்க கூடாது என்று சென்னை வர பிடிக்காமல் மும்பைக்கே ஜோதிகா சென்றுவிட்டார்.
ஏன் ஓட்டு போட வரவில்லை என்று கேட்டதற்கு, வருடா வருடம் ஓட்டுப் போடுறேன் முக்கிய காரணங்களால் வர முடியவில்லை என்றும், ஆன்லைனின் ஓட்டு போட வசதி இருக்கு என்று சொன்னார் ஜோதிகா. வருட வருடம் தேர்தல் வருகிறது என்றும், தேர்தலில் ஆன்லைனில் எப்படி ஓட்டு போடலாம்னு யார் சொன்னா? அரசியலுக்கு வருவீங்களா என்பதற்கு யாரும் கூப்பிடல இப்போதைக்கு இல்லை என்று கூறினீர்கள். ஒருவேளை யாராவது கூப்பிட்டால் போவீங்களா என்று பயில்வான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விஜய் அரசியலுக்கு வருவது ஜோதிகாவுக்கு பிடிக்கவில்லையா ? அதனால். தான் அவுட் ஆஃப் டாபிக் என்று அந்த கேள்வியை புறக்கணித்தாரா என்ன என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.