சொகுசு கார், பிரம்மாண்ட பங்களா.. அதெல்லாம் எப்படி வந்தது? பிரபல நடிகையை விளாசிய பயில்வான்..!

Author: Vignesh
9 December 2023, 12:30 pm

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

priya bhavani shankar - updatenewse360

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார்.

இந்நிலையில், ஈசிஆரில் கோடியில் பங்களா, பல லட்சத்தில் கார் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை எல்லாம் அதெல்லாம் எப்படி வந்தது என்று பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு படத்திற்கு, 30 லட்சம் சம்பளம் வாங்கி வந்த பிரியா பவானி சங்கர் எப்படி கோடிக்கணக்கில் பங்களா, கார் வாங்க முடிந்தது.

வாய்ப்பு தேடி தயாரிப்பாளரிடம் வந்த ஒரு இயக்குனர் பிரியா பவானி சங்கர் கால் சீட்டை கேட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பியிருக்கிறார். அதற்கு படாத பாடுபட்ட இயக்குனரோ கடைசியாக படத்தில் நடிக்க இருந்த நடிகரை சந்தித்து பேசி பிரியா பவானி சங்கர் கால்சீட்டை வாங்கி இருக்கிறார்.

priya-bhavani-shankar-

ஏனென்றால், அந்த ஹீரோ பவானிசங்கருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் படத்திற்கு பைனான்ஸ் செய்யும் நிறுவனமும் நிறுவனமும் அவருக்கு நெருக்கமானவர்தான். அவர் என்ன கூறினாலும், யோசிக்காமல் பைனான்சியர் செய்வாராம். ஒரு படத்திற்கு 30 லட்சம் சம்பளம் வாங்கி குறுகிய கால சினிமாவில் இருந்து இந்த சொகுசு வாழ்க்கை எப்படி வந்தது. நானும் கேட்க மாட்டேன் நீங்களும் கேட்கக்கூடாது ஏனென்றால், இது பெரிய இடத்து விவகாரம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!