தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் நடந்தது. அதில் தில்ராஜு கலந்துகொண்டு, பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக அளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது.
நேரடி தெலுங்கு படத்திற்கு வாய்ப்புகள் கிடைக்க திரையரங்கு ஒதுக்கப்படுவதில்லை. இதனால் தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் என்று அதிரடியாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.
இதனால் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. பான் இந்தியா என வந்துவிட்ட இந்தக் காலத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்வது விரும்பத்தகக்து அல்ல என விஜய்க்கு ஆதரவாக குரல்களும் எழுந்துள்ளன.
வாரிசு திரைப்படத்தின் இந்த பிரச்சனையை தொடர்ந்து, வாரிசு படத்திற்கு பல தமிழ் பிரபலங்கள் தங்களின் ஆதரவு குரலை கொடுத்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் பேரரசு, இயக்குனர் லிங்குசாமி போன்ற பலர் வாரிசு திரைப்படத்தை திட்டமிட்டபடி தெலுங்கில் பொங்கல் அன்று வெளியிட வேண்டும் என்று தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கும் தமிழ்நாடு திரைப்பட விநோயோகிஸ்தர்கள் சங்க தலைவர் பேசி இருபதாவது ஆந்திராவில் அவனுடைய படத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறான். விஜய்க்கு 25 கோடி அதிகமாக சம்பளம் கிடைக்கிறது என்று அவர் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்கிறார்.
எப்படி இவர்கள் சம்பளத்தை உயர்த்தி விட்டு சென்று விட்டால் அடுத்த வரும் தமிழ் தயாரிப்பாளர்கள் எப்படி இவர்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள். அவர்களை பொறுத்த வரை இது டப்பிங் திரைப்படம் தான் என்று கூறி இருந்தார்.
வாரிசு தெலுங்கில் 35% சதவீத திரையரங்கில் தான் வெளிகவும் அங்கு விஜய்க்கு மரியாதை அவ்ளோ தான் என்று பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் வாரிசு படம் வெளியாவதில் இத்தனை சிக்கல் கொடுப்பதற்கு காரணம் தமிழ் நாடு திரைப்பட விநியோகிஸ்தர் தலைவர் தான் என்று கே ராஜனை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார் பயில்வான்.
இது ஒருபுறம் இருக்க தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வாரிசு படத்திற்கு எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லை, நேரடி தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மட்டும் தான் சொன்னோம். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் திட்டமிட்டபடி வாரிசு படம் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.