தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் நடந்தது.
அதில் தில்ராஜு கலந்துகொண்டு, பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக அளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது. நேரடி தெலுங்கு படத்திற்கு வாய்ப்புகள் கிடைக்க திரையரங்கு ஒதுக்கப்படுவதில்லை.
இதனால் தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் என்று அதிரடியாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.
இதனால் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. பான் இந்தியா என வந்துவிட்ட இந்தக் காலத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்வது விரும்பத்தகக்து அல்ல என விஜய்க்கு ஆதரவாக குரல்களும் எழுந்துள்ளன.
வாரிசு திரைப்படத்தின் இந்த பிரச்சனையை தொடர்ந்து, வாரிசு படத்திற்கு பல தமிழ் பிரபலங்கள் தங்களின் ஆதரவு குரலை கொடுத்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் பேரரசு, இயக்குனர் லிங்குசாமி போன்ற பலர் வாரிசு திரைப்படத்தை திட்டமிட்டபடி தெலுங்கில் பொங்கல் அன்று வெளியிட வேண்டும் என்று தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் வாரிசு படம் வெளியாவதில் இத்தனை சிக்கல் கொடுப்பதற்கு காரணம் தமிழ் நாடு திரைப்பட விநியோகிஸ்தர் தலைவர் தான் என்று கே ராஜனை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார் பயில்வான்.
மேலும், துணிவு படம் திட்டமிட்டபடி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும் அதற்கு மாறாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் உதயநிதி சந்தோசமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
மேலும், வாரிசு படம் வெளியாகமல் போனால் துணிவு படம் தமிழகத்தில் 1000 திரையரங்கிற்கு மேல் வெளியாகும் என்றும் ககூறியுளளார். இது ஒருபுறம் இருக்க தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வாரிசு படத்திற்கு எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லை, நேரடி தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மட்டும் தான் சொன்னோம். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் திட்டமிட்டபடி வாரிசு படம் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.