‘காலேஜ் ரோடு’ படத்தின் கதையும் அந்த படத்தின் கதையும் ஒன்னு தான் – அடித்து சொல்லும் பயில்வான் ரங்கநாதன்..!

Author: Vignesh
12 January 2023, 4:00 pm

‘வாரிசு’ படத்தின் கதையும், ‘காலேஜ் ரோடு’ திரைப்படத்தின் கதையும் ஒன்று தான் என பிரபல நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குனரான வம்சி இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ‘வாரிசு’ படம் குறித்து நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள கருத்து, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

vijay - updatenews360 g

இயக்குனர் ஜெய் அமர் சிங் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘காலேஜ் ரோடு’ படத்தின் கதையும் ‘வாரிசு’ திரைப்படத்தின் கதையும், ஒரே மாதிரியான கதை தான் என்றும், ‘காலேஜ் ரோடு’ படத்தில் ஆக்சன் காட்சிகள் குறைவாக உள்ளது. ‘வாரிசு’ படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக உள்ளது. மற்றபடி ஒரே விதமான வசனங்கள் தான் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே, பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

varisu - updatenews360

‘காலேஜ் ரோடு’ படத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் லிங்கேஷ், ஹீரோவாக அறிமுகமாகி, வங்கி பாதுகாப்புக்கான சாஃப்ட்வேர் ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் லிங்கேஷ். அதன் மூலம் சைபர் கிரைம் துறைக்கு உதவினாரா இல்லையா? என்பதை மிகவும் விறுவிறுப்பான கதைய அம்சத்துடன் இயக்கியிருந்தார் இயக்குனர்.

college road - updatenews360

மேலும் நாயகி மோனிகா நடித்திருந்தார். காதல், நண்பர்களுடன் நான் நட்பு, காமெடி என இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்துடன், விஜய்யின் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை ஒப்பிட்டு பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளதால், அந்த படத்தின் கதைக்கும், இதற்கும் என்ன சம்மந்தம் என்கிற குழப்பத்தோடு, பயில்வான் ரங்கநாதனுக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

varisu - updatenews360
  • Sai pallavi Ignore Thandel Promotions Event சாய் பல்லவிக்கு திடீர் உடல்நலக்குறைவு : சினிமாவை விட்டு விலக முடிவு!