பல பெண்களுடன் தொடர்பு?.. பார்த்திபன் குறித்து பகீர் கிளப்பும் பயில்வான்..!

Author: Vignesh
11 July 2024, 9:14 am

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும். இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.

seetha - updatenews360

இந்நிலையில், நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பல முகங்களை கொண்டவர் பார்த்திபன். இவர் நடிகை சீதாவை 1990 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கும் நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், பிரபல நடிகர் பயில்வான் பேட்டி ஒன்றில் பேசுகையில் பார்த்திபன் தனது மனைவி சீதாவை பிரிந்து பின்னர் அடிக்கடி ஒவ்வொரு பெண்களுடனும் காதல் செய்து வந்தார். சிலர் எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்று சொல்லி சில பெண்கள் பிரிந்து சென்று விட்டனர். இதே போல், பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் பார்த்திபனுக்கு காதல் ஏற்பட்டது என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…