போலீஸோடு அழைத்து வரப்பட்ட பிரதீப்.. ராஜ மரியாதை கொடுத்து மாஸான வரவேற்பு..!

Author: Vignesh
7 February 2024, 6:39 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

அந்நிகழ்ச்சியில், ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் வெற்றியாளரை விட மிகவும் பிரபலமாக மக்களால் கொண்டாடப்பட்டவர் பிரதீப் இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது அனைவருக்குமே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது முதன் முறையாக பள்ளி ஆண்டு விழா ஒன்றில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அதில், பிரதீப்புக்கு ராஜ மரியாதை கொடுத்து மாசான வரவேற்பு அளித்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்கள் சூப்பர் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

pradeep
  • Shankar Praises Lappar Panthu Movie அலட்டிக்காம நடிக்கிறாரு…உண்மையிலே அவர் கெத்து தா…பிரபல நடிகரை புகழ்ந்து பேசிய இயக்குனர் சங்கர்…!
  • Views: - 401

    0

    0