அசல் கோளாறுவை திரும்ப கூட்டிடுவாங்க… அதுக்கு பதிலா இவர எலிமினேட் பண்ணுங்க பிக்பாஸிடம் கெஞ்சி கதறும் நிவாஷினி.. வைரல் வீடியோ..!!
Author: Vignesh4 November 2022, 4:15 pm
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. மூன்று வாரங்கள் கடந்த நிலையில் ஜிபி முத்து, சாந்தி மாஸ்டரை தொடர்ந்து கடந்த ஞாயிற்று கிழமை கமல் ஹாசனால் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி தடவுதல், கிள்ளுதல் என்று தவறான கோணத்தில் நடந்து கொண்டது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
இதனால் வெறுப்படைந்த பிக்பாஸ் ரசிகர்கள் அசல் கோளாறு வீட்டில் இருக்க வேண்டாம் என்று நினைத்து வெளியேற்றினார்கள்.
இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியொன்றில், பிக்பாஸ் வீட்டில் நான் செய்தது தவறுதான் என்னை மன்னிக்கவும் என்று கூறியிருந்தார்.
மேலும், என்னை இணையத்தில் மீம்ஸ்-ஆல் ட்ரோல் செய்வது கஷ்டமாக இருந்தது. பெண்களிடம் எந்த தவறான எண்ணத்திலும் நான் தொடவில்லை என்றும் எல்லோரும் என் வீட்டில் இருப்பவர்களை போல் தான் பார்த்தேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அசல் கோளாறு மீது காதலில் சுற்றிய நிவாஷினி, பிக்பாஸிடம் ஒரு டீல் பேசியுள்ளார். அசீமை வெளியில் அனுப்பிவிட்டு அசல் கோளாறை உள்ளே விடுங்கள் என்று பைத்தியம் போல் அழுது பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Need Justice for Kolaaru Bro 😀
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 2, 2022
Azeem enna paavam paninaru..
pic.twitter.com/gGpDpym9O7