வெக்கேஷன் சென்றுள்ள பிக் பாஸ் பிரபலங்கள்.. ! எங்க போய் இருக்காங்க தெரியுமா?
Author: Vignesh9 February 2024, 3:20 pm
பிக்பாஸ் 7 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார் அர்ச்சனா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

இந்நிலையில், அர்ச்சனா டைட்டில் வென்றதை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஆட்டம், பாட்டாம், சர்ப்ரைஸ் என உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கிறார்.

இந்த நிலையில், பிக்பாஸ் 7 முடித்த போட்டியாளர்கள் சிலர் இப்போது வெக்கேஷன் சென்றுள்ளனர். அதாவது, அர்ச்சனா கொடைக்கானலிலும் கடைசி வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்த மாயா தாய்லாந்தும், செல்ல பூர்ணிமா வயநாட் சென்றுள்ளார். அங்கு எடுக்கும் புகைப்படங்களையும் பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.