20 வருஷமா மகனுக்குக் கூட இதை சொல்லல.. விசித்ரா சொன்ன விஷயத்தால் உடைந்த மகன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசினார்கள். இதில், நடிகை விசித்ரா தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மனம் உறுகி பேசினார். இதில், படப்பிடிப்பின் போது படத்தின் ஹீரோ என்னை அவருடைய ரூமுக்கு வரச் சொல்லி தவறான முறையில் அழைத்தார்.

நான் போகவில்லை, அதன் பின்னர் என்னை பலரும் டார்கெட் செய்து தவறான முறையில் நடக்க முயற்சி செய்தனர். என்னை ஒருவர் தவறான முறையில் தடவினார். தெரியாமல் செய்திருப்பார் என முதல் முறை நான் விட்டுவிட்டேன். அதன் பின்னர் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தார். நான் என்னை தொட வந்த கையை இறுதியில் பிடித்து விட்டேன். உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் சென்று எனக்கு நடந்ததை புகார் கொடுத்ததும், யாரும் எனக்கு உதவவில்லை சங்கத்தலைவரும் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என கண்கலங்கி பேசினார்.

இதனிடையே, நடிகை விசித்ராவை ரூமுக்கு வா என அழைத்து, இப்படியொரு கொடுமை நடக்க காரணமாக இருந்த அந்த நடிகர் பாலகிருஷ்ணா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கதையில் விசித்ரா கூறிய விஷயங்களும், பாலகிருஷ்ணாவின் இப்படத்தின் காட்சிகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

விசித்ரா இந்த சம்பவத்தை கூறும்போது தன்னை தவறாக அழைத்து டாப் நடிகர் என்று விசித்ரா குறிப்பிட்டு இருந்தார். இதனால் அனைத்து விஷயங்களும் பாலகிருஷ்ணாவுடன் ஒத்துப்போவதாக கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய விசித்ராவின் கணவர் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் தானும், விசித்ராவும் நண்பர்கள் கூட இல்லை. சக மனிதனாக மட்டுமே அவருக்கு உதவினேன். இந்த விஷயத்தில், நீ ஏன் தலையிடற இது எங்களுடைய பிரச்சனை என்று அந்த பிரபல நடிகர் மிரட்டினார். திருமணத்திற்கு பின்பு இது தொடர்பான வழக்குகள் நடந்தது. ஆனால், நடிகர் சங்கம் வழக்கை வாபஸ் வாங்க வைக்க மட்டுமே போராடினார்கள். யாருமே எங்களுக்கு துணையாக நிற்கவில்லை. கமல்ஹாசன் கூட இந்த டாபிக்கை பிக் பாஸில் பேச மாட்டார் என்று விசித்ராவின் கணவர் ஷாஜி பேசியுள்ளார்.

மேலும், இந்த ஒரு கசப்பான சம்பவத்தை மறக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். அப்படி இருக்கும்போது விசித்திரா ஏன் இதை இப்போது, சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கே பார்க்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என் பெரிய மகன் இதை பார்த்துவிட்டு கல்லூரிக்கு கூட போகவில்லை. மனம் உடைந்து விட்டான். இனிமேல் தான் அவரிடம் இதைப் பற்றி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

11 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.