குவைத்தை தொடர்ந்து வேற ஒரு நாட்டிலும் பீஸ்ட் படத்திற்கு தடை.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. !

Author: Rajesh
5 April 2022, 2:06 pm

பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கான டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் KGF படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது. இதனால் பீஸ்ட் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் பெரும் போராட்டமாக உள்ளது. தற்போது உள்ள நிலைமையில் அஜித்தின் வலிமை படம் வெளியான திரையரங்குகளை விட விஜய்யின் பீஸ்ட் படம் திரையிடப்படும் திரையரங்குகள் குறைவாக தான் உள்ளதாக கூறப்படுகிறது. என வசூல் போட்டியில் பாதிக்கபடும் எனவும் தெரிகிறத.

இந்த நேரத்தில் படத்தில் சில மோசமான காட்சிகள் இருக்கிறது எனவே படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என குவைத் அரசாங்கம் கூறியிருக்கிறது.
குவைத் தொடர்ந்து மலேசியாவிலும் இதே பிரச்சனை தற்போது வந்துள்ளது.

ஏற்கெனவே சில பிரச்சனைகள் மலேசியாவில் ஓடிக் கொண்டிருக்க தற்போது இப்படத்தில் தீவிர வாதிகள் போன்ற காட்சிகள் இருப்பதால் மலேசியா அரசு குவைத் எடுத்துள்ள முடிவு போல இங்கேயும் போடலாமா என யோசித்து வருகிறார்களாம்.
படம் அங்கு சுமூகமாக வெளியாகுமா அல்லது நிறைய கட்டுப்பாடுகளுடன் ஒளிபரப்பாக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி