விஜய்யின் குரலுக்கு குறைந்த வரவேற்பு : அசராமல் அடித்து வரும் அரபிக்குத்து மீண்டும் புதிய சாதனை..!
Author: Rajesh20 March 2022, 1:17 pm
விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிரமாண்ட திரைப்படம் பீஸ்ட். இப்படத்தினை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ள இப்படத்தை தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியிருந்த அரபிக் குத்து பாடல் சொன்னதது போல் பான் வேர்ல்ட் அளவில் ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் தினமும் பார்வைகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், விஜய்யின் குரலில் ஜாலியோ ஜிம்கானா பாடல் நேற்று மாலை வெளிவந்துள்ளது. வெளிவந்த 5 நிமிடத்தில் 3 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தாலும், 10 நிமிடத்தில் 5.5 லட்சம் பார்வையாளர்களை மட்டுமே பெற்றது ஜாலியோ ஜிம்கானா பாடல். ஆனால், கடந்த மாதம் வெளிவந்த அரபிக் குத்து பாடல் வெளிவந்த 10 நிமிடத்தில் சுமார் 8 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜாலியோ ஜிம்கானா பாடல் 18 மணிநேரத்தில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆனால் கடந்த மாதம் வெளி வந்த அரபிக்குத்து பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.