பீஸ்ட் படம் வெற்றியா..? தோல்வியா..? படக்குழுவினருடன் குட்டி பார்ட்டியில் நடிகர் விஜய்..!!!

Author: Babu Lakshmanan
25 April 2022, 5:17 pm

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை படத்தில் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது 65வது படத்தை நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு நாள் பூஜாவுடன் விஜய் வேலை சம்பந்தமாக மாலுக்கு வருகிறார். அங்கு திடீரென பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாலை ஹைஜாக் செய்கிறார்கள். பின் வீரராகவன் கைது செய்த அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும், மாலில் விஜயும் உள்ளார் என்பது போலீசுக்கு தெரியவருகிறது. கடைசியில் விஜய் மக்களை எப்படி தீவிரவாத கும்பலில் இருந்து காப்பாற்றினார்? அந்த தீவிரவாத தலைவன் விடுவிக்கப்பட்டானா? என்பது தான் படத்தின் கதை.

இந்தப் படத்தில் விஜய்யின் காட்சிகள் வெயிட்டாக இருந்தாலும், படத்தில் தீவிரவாதிகளை ரொம்பவே வீக்காக காண்பித்துள்ளார்கள். இதனால் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பில்லாமல் போய் விடுகிறது. முதல் பாதி காமெடி, ஆக்சன் என நெல்சன் ஸ்டைலில் கொண்டு சென்றாலும் இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு சலிப்பு தட்டும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், இந்தப் படத்திற்காக இயக்குநர் நெல்சனை விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் பீஸ்ட் படக்குழுவினருடன் மாலையில் சிறு பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த பார்ட்டியில் நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன், நடிகர்கள் சதீஷ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் நெல்சன், எங்களுடன் நேரத்தை செலவிட்ட நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அவருடன் இருந்த தருணம் நல்ல மகிழ்ச்சியுடனும், மறக்க முடியாததாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவருடன் பீஸ்ட் படத்தில் ஆற்றிய பணி குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்த அவர், திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படத்திற்காக வேலை செய்தவர்கள் இல்லையென்றால், பீஸ்ட் படம் சாத்தியமில்லை என்று கூறினார். மேலும், பல்வேறு தடைகளை தாண்டி தங்களுக்கு ஆதரவும், அன்பும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இயக்குநர் நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!