விஜய் குரலில் Beast Second Single .. வெளியிட்ட படக்குழு… கொண்டாடும் ரசிகர்கள்..!

Author: Rajesh
16 March 2022, 7:10 pm

நெல்சன் – விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ள நிலையில், படக்குழு எந்தவித அப்டேட்டும் வெளியிடாமல் இருந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இல்லை என வெளியான செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பீஸ்ட் அப்டேட்டாவது விடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க Beast Second Single படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் குரலில் இருக்கும் இந்த வீடியோவில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • Bharatha movie Samantha cameo ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!முக்கிய ஹீரோயினுடன் கேமியோ ரோலில் நடிக்கும் சமந்தா.!